Watch Lotus News TV Live

Watch Lotus News TV Live

Tags:
 

3 Comments

  1. stalinthomas

    ஊர் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: குடும்பத்துடன் காட்டில் குடியேறிய கிராமமக்கள்
    ==========================================================
    ராதாபுரம், ஜூலை.11–

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்குட்பட்டது யாக்கோபுரம்–சிதம்பரபுரம். இந்த ஊர் பெயர்களை பயன்படுத்துவது தொடர்பாக அப்பகுதியில் இரு தரப்பினரிடையே பிரச்சினை உள்ளது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று யாக்கோபுரம் 2–வது வார்டு பகுதிகளில் உள்ள போர்டுகளில் சிதம்பரபுரம் என பெயர் எழுதி கொள்ளலாம் என கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டாராம். இதற்கு யாக்கோபுரம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் இன்று காலை அங்குள்ள மங்களம் காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை.

    இது குறித்து முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர்கள் ஆர்தர்செல்வகுமார், செல்லத்துரை ஆகியோர் கூறியதாவது:–

    வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட யாக்கோபுரம் கடந்த 150 வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. சிதம்பரபுரம் கடந்த 15 வருடத்திற்கு முன்புதான் உருவாக்கப்பட்டது. இதனால் நாங்கள் யாக்கோபுரம் என்றே அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கலெக்டர் யாக்கோபுரம் 2–வது வார்டு பகுதியை சிதம்பரபுரம் என மாற்றியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரி காட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    பொதுமக்கள் போராட்டத்தையடுத்து வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

  2. வெற்றிவேல்

    மிகவும் பயணுள்ள செய்திகள் மற்றும் பிஜேபி செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது LOTUS TV

  3. this site is not showing any news
    pl update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *